ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலய வரலாறு
டென்கெல்டர் நெதர்லாந்து
ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலய வரலாறு
டென்கெல்டர் நெதர்லாந்து
ஆயிரம் கண்கள் கொண்;டு தரிசித்தாலும் ஐயனே நீ அருளோடு வீற்றிருக்கும் திருக்கோயிலின் அழகத்தனையூம் திக்கெட்டும் நின்று பார்த்தாலும் விண்ணில் ராஜகம்பீரமாக உயர்ந்து பஞ்சவர்ணத்தில் பட்டொளி வீசிப்பளபளக்கும் எழில்மிஞ்சக் காட்சி தரும் ராஜகோபுரத்தின் சிறப்பத்தனையூம் கூறிவிடமுடியவில்லை. கருணையே உருவான தெய்வமே நீ அருள்மழை பொழிய அடியவர் நாமின்று ஆனந்தம் கொண்டோம். சொர்க்கத்தில் உன்னைத் தரிசிக்கின்றௌமோ என்று சொக்கி மனம் துதிக்க நிற்கின்றௌம். துதிக்கையானே உந்தன் திருவருளை எண்ணி மனம் வியக்கின்றது. அதிசயமாய் நீயிங்கு அருளாட்சி செய்கின்ற பேரருளை எண்ணி மனம் பேருவகை கொள்கின்றது.
ஸ்ரீவரதராஜ செல்வவிநாயகரே 1991 ஆம் ஆண்டு தெடக்கம் நெதர்லாந்தில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு அருள் செய்யத் திருவூளம் கொண்டு விட்டீர். இதனால் இன்றைக்கு பல்லாயிரம் ஆண்டு பழமை வாhய்ந்த வரலாறு உனக்கில்லை. என்றாலும் ஒவ்வொரு நாளும் நீ நிகழ்த்திய அற்புதங்கள் இக்கலியூகத்தில் கணக்கிலடங்காது. உன்னைக் காணவந்த பக்தர்கள் அனைவரிற்கும் நீ காட்சி தந்த திருவருள் உன்னருளாட்சியின் சிறப்பாகும். ஏட்டிலும்;இ எழுத்திலும் அடக்கிவைக்க முடியாது உந்தன் அற்புதத்தை இன்னும் எத்தனை யூகங்களிற்கு உன் அருளாட்சி இவ்வாலயத்தில் தொடர்ந்திருக்குமோ அது எதனையூம் நாமறியோம். ஆனாலும் ஐங்கரனே! எங்கள் நெஞ்சம் உறைந்தவனே உன் ஆலயத்தின் வரலாறு எங்களை அதிசயிக்க வைக்கின்றது.
ஐரோப்பாக் கண்டத்தின் கடல்நீர் மட்டத்திற்குக் கீழே தாழ்ந்து கிடக்கும் நாடாகிய ஆதி காலத்தில் ஒல்லாந்து என்றும்இ தற்போது நெதர்லாhந்து என்றும் அழைக்கப்படுகின்ற நாட்டின் கண்ணே அதன் வட பகுதியிலே மூன்று பக்கங்களும் கடலாலும் சமுத்திரத்தாலும் சூழ்ந்த பழமை மிக்க டென்கெல்டர் என்னும் பதியினிலே அமைந்த பல சிறப்புகளைக் கொண்ட ஆலயமாகும். இது இiறைவனின் திருவருளால் எல்லோரும் வியக்க அபாpதமான வளர்ச்சி கண்ட ஆலயமாகும்.
இலங்கையில் தொடங்கிய இனக்கலவரத்தால் தாய்மண்ணில் செந்நீராறு ஓடியபோதுஇ திக்குத் தெரியாது தறிகெட்டு நாலாபுறமும் சிதறியோடிய எம்மவர்கள் எங்கு போகிறௌம் என்று தெரியாமல் ஒல்லாந்தில் கரைசேர்ந்தபோதுஇ அவர்கள் இந்நாட்டில் எதிர்கொண்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. காலநிலையின் கடும் குளிர் வாட்டாமல் வாட்டியது. புரியாத மொழி மூளையினைப் பிய்த்தெடுத்தது. உரைத்து விடக்கூட தமிழ் உறவூ கிடைக்கவில்லை. வெள்ளி தெரியாதுஇ வியாழன் தெரியாதுஇ ஆடி தெரியாதுஇ அமாவாசை தெரியாதுஇ தவியாய்த் தவித்தார்கள். இறைவழிபாடு செய்ய விரும்பியபோது புனித நிக்கொலாஸ் தேவாலயத்தின் குருவானவர் விடுதியின் சிறிய அறையொன்று இடமாகக் கிடைத்தது.
அன்று இங்கிருந்த மெய்யன்பர்களிற்கு அருள்புரிய திருவூளம் கொண்ட எம்பெருமான் அருள்நிறை
கணபதியாக 1991 ஆம் ஆண்டு விக்ர வடிவில் நெதர்லாந்தின் டென்கெல்டர் பதியினில் எழுந்தருளினார். 29-03-1991 பிரசோற்பதி வருடம் பங்குனி மாதம் உத்தர நட்சத்திர தினம் வெள்ளிக்கிழமையன்று நெதர்லாந்து வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றுகூடி சைவசமய விதிமுறைகளுக்கமைய குருமார்களினால் கும்பாபிN;ஷகம் செய்யப்பட்டு வினைகள் நீக்கி நலம் நல்கும் விநாயகருக்கு ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் என்ற நாமம் சூட்டி வழிபட்டனர்.
மூலவிக்கிரகமான விநாயகரும் பரிவார மூர்த்திகளாக மகாலட்சுமிஇ கண்ணபெருமான்இ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான்இ வைரவர் போன்ற தெய்வங்களுடன் காட்சிதரும் இவ்வாலயம் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறை களைந்து நிறைவான வாழ்வழிக்கின்றது. விநாயகர் அடியார்களின் மனங்களிலெல்லாம் நிறைந்து செல்வவிநாயகராக வீற்றிருந்து அருள் நல்கி வருவதோடு இங்கு சைவமும் தமிழும் தழைத்தோங்க அருள்பாலிக்கின்றார்.
எத்தனை தடைகள் ஏற்படினும் நிர்வாகத்தினர்க்கு உறுதுணையாக நின்று அத்தனை தடைகளையூம் உடைத்து துணைநிற்கின்றார். நாளுக்கு நாள் தன்னை நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையாலும் அங்கு ஏற்பட்டட வசதியீனங்களினாலும் தனக்கென வேறு ஒரு இடம் வேண்டும் என்று எம்பெருமான் விரும்பியமையாலும்இ நுடணநளெவசயயவ-36 என்ற பழைய பாடசாலைக் கட்டிடத்தை தெரிவூ செய்து வாடகைக்கு குடியேறினார். இவ்விடத்தினை தமிழ் மக்களிற்கு தனியிடமாக ஒதுக்குவதற்கு ஆலய நிர்வாக சபையினருக்கு டென்கெல்டர் அகதிகள் சங்கம் செய்த உதவிகளும் ஒத்தாசைககளும் போற்றுதற்குரியதாகும். அத்தோடு 01-08-1992 அன்றிலிருந்து நெதர்லாந்து நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய ஒரு பதிவூ செய்யப்பட்ட அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருவதற்கான அனுமதியூம் சட்டபூர்வமாக கிடைக்கப்பெற்றது. 17-08-1992 திங்கட்கிழமை மாலை 7..30 மணியளவில் பரிவாரமூர்த்திகளுடன் பக்தர்கள் புடைசூழ வீதிவலம் வந்து பிரவேசம் செய்த செல்வவிநாயகர்இ 11-09-1992 வெள்ளிக்கிழமை பகல் 12.15 முதல் 1.35 வரையூள்ள பூரணை திதியூம் சதைய நட்சத்திரமும் சித்தயோகமும் தனுலக்கினமும் கூடிய மங்கள சுபமுகூர்த்த வேளையில் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் கண்டபோது அவரின் அருள் பலமடங்கு அதிகரித்து பெருகியது.
1996 ஆம் ஆண்டு அரசின் கட்டிடங்கள் புனர்நிர்மாணம் செய்யூம் திட்டத்தின் கீழ் இவ்வாலயத்தின் கட்டிடமும் பழுது பார்க்கப்பட்டபோது மீண்டும் பாலஸ்தானம் செய்யப்பட்டது. அச்சமயம் விநாயகரின் மூலவிக்கிரகம் சிறிதாக இருந்தமையால் உருவத்தில் பெரிதான விநாயகர் விக்கிரகம் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டதோடு மூலமூர்த்தி மகாலட்சுமிஇ கண்ணபெருமான்இவள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான்இ வைரவர் போள்ற மூர்த்திகளுக்கு தனித்தனியான பீடங்கள் அமைக்கப்பட்டு மங்களகரமான தாதுவருடம் பங்குனி மாதம் 10 ஆம் நாள் 22-03-1997 ஞாயிற்றுக்கிழமை காலை 8.46 மணி முதல் 10.18 வரையூள்ள பூரணை திதியூம் பங்குனி உத்தர நட்சத்திரமும் சித்தமிர்தயோகமும் இடப லக்கினமும் கூடிய சுபமுகூர்த்த சுபவேளையில் மீண்டும் மூலமூர்த்திகளிற்கும்இ பரிவாரமூர்த்திகளிற்கும் புனராவர்த்தன பிரதிஸ்டா மகாகும்பாபிN;ஷகம் ஆகமமுறைப்படியூம் மிகுந்த ஆசாரத்துடனும் செய்யப்பட்டது. பல சிறந்த சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தார்கள்.
மகாகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று பூர்த்தியாக சங்காபிஷேகம் நடைபெற்றது.
விநாயகப்பெருமான் நீண்டநாட்கள் வாடகைக் கட்டிடத்தில் இருப்பதற்கு விரும்பாமையோ அல்லது இந்த ஒல்லாந்து நாட்டில் தனக்கு ஓர் இடம் நிரந்தரமாக அமையவேண்டும் என்று விரும்பினாரோ அவரின் பார்வையிலே எமக்கு மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டது. அரசின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய நகர் நிர்மாணத் திட்டத்தின்கீழ் ஆலயம் அமைந்துள்ள இடங்களிலுள்ள கட்டிடங்களையூம் விரைவில் அகற்றவேண்டிய நிலையேற்பட்டது. 13ஆண்டுகளாக
சிறுகச் சிறுக சேர்த்து வளர்த்த எமது ஒரே ஒரு சொத்தான இவ்வாலயம் கைநழுவிப் போய்விடுமோ என்று கதிகலங்கி பக்தர்கள் நின்ற வேளையில் எம்பெருமானின் பேரருளினால் ஆலயம் அமைப்பதற்குகந்த நிலமொன்றை வாங்கககூடிய வாய்ப்பு கைகூடியது. பல சிரமங்களின் பின்னர் கைகூடிய அந்த நிலத்தை வாங்குவதற்கு போதிய பணமின்றி நிர்வாகத்தினர் தவித்தபொழுது இந்த சிறிய நாட்டில் சிறிய எண்ணிக்கையில் வாழ்ந்த தமிழர்கள் நான் முந்தி நீ முந்தியென தங்களால் முடிந்த பொருளுதவியை செய்ய முன்வந்தார்கள். அதுமட்டுமல்ல லண்டனில் நடைபெற்ற சைவ மகாநாட்டிலே ஆலய நிர்வாகத்தினர் தங்கள் பிரச்சினையினை எடுத்துச் சொன்னபோது அங்கிருந்த அனைவரும் கருத்தொருமித்து இவ்வாலயத்திற்கு நிதியூதவி செய்வதெனத் தீர்மானித்தார்கள். அங்குள்ள இந்து ஆலயங்களும் புண்ணிய சீலர்களும் இவ்வாலயத்திற்கு நிதியை வாரி வழங்கினார்கள். அதுமட்டுமல்ல ஐரோப்பாவில் உள்ள ஏனைய ஆலயங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வந்தனர். இதில் Hயஅஅ காமாட்சிஅம்பாள் ஆலயமும் அதன் பிரதமகுருவூம் குறிப்பிடத்தக்கவர்கள்.
எம்பெருமானின் பேரருளினாலும் பெருங்கருணையினாலும் மிகக்குறுகிய கால நிதி திரட்டலோடு ஒல்லாந்து நாட்டிலே ஓங்கியெழுந்த இராஜகோபுரத்துடன் கூடிய ஆகம விதிகளிற்குட்பட்ட விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு மிகவூம் உகந்த நிலம் 01-09-2000 ஆம் ஆண்டு விநாயகருக்குகந்த ஆவணி சதுர்த்தி தினத்தில் ஆலயத்தின் பெயரால் அரசிடமிருந்து கொள்வனவூ செய்யப்பட்டது. பக்தர்கள் எல்லோரும் விநாயகருக்கு ஆலயம் விரைவாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தை தம் சிந்தையில் சுமக்கத் தொடங்கி நீண்ட நாட்களாகின்றது. ஸ்ரீ மங்களகரமான விஷேச வருடம் ஆவணித் திங்கள் 6ஆம் நாள் 22-08-2001 புதன்கிழமை விநாயகருக்கு மிகவூம் உகந்ததாகிய ஆவணி; சதுர்த்தி தினத்தில் பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரையூள்ள சுபமங்களவேளையில் வேண்டுவோர்க்கு வேண்டுவதை வாரிவழங்கும் ஸ்ரீ வலவாம்பிகை சமேத ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகப் பெருமானுக்கு நெதர்லாந்திலே காலத்தால் அழியாத விண்ணைத்தொடும் இராஜகோபுரத்துடன்; ஆகமவிதிகளுக்குள் அமைந்த ஆலயம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எத்தனையோ இடையூ+றுகள் சிரமங்கள் பண நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அத்தனையூம் எம்பெருமான் தன் அருட்பார்வையால் தகர்த்து நாம் வணங்க தான் எழுந்தருளும் ஆலயம் அமைய அருள் பாலித்துள்ளார்.
எம்பெருமானின் பேரருளால் மங்களகரமான சுபானு வருடம் உத்தராயணம் ஆனித் திங்கள் 22ஆம் நாள் 06-07-2003 ஞாயிற்றுக்கிழமை பூர்வபட்சமும் சப்தமி திதியூம் உத்தர நட்சத்திரமும் கன்னி லக்கினமும்இ ஆனி உத்தர திருநாளும் கூடிய சுபமங்கள நாளில் பகல் 12 மணி 12 நிமிடம் வரையூள்ள சுபவேளையில் ஸ்ரீ வல்லாம்பிகா சமேத ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகப் பெருமானிற்கும்இ பரிவார மூர்த்திகளுககும்இ அநாவர்த்த பிரதிஷ்டா நூதன ஆலய பஞ்சகுண்ட மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகமும் அதன் பூர்த்தியாக சங்காபிஷேகமும் எம்பெருமானின் திருவருளால் நிறைவேற்றுகையில் இறைவனின் திருவருளும் மிகச் சிறப்பாகப் பெருகிவர கும்பாபிஷேகம் நடந்தேறிய நிருத்த ஆண்டு இதுவரை எம்பெருமானிற்கு ஆண்டுதோறும் நடைபெற்று வந்த அலங்கார உற்சவம்இ மகோற்சவமாக திருவருள் பெருகியது. இம் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 6 ஆம் நாள் மாம்பழத் திருவிழாவூம்இ 7 ஆம் நாள் கப்பல் திருவிழாவூம்இ 8 ஆம் நாள் சப்பறத் திருவிழாவூம்இ 9 ஆம் நாள் தேர்த் திருவிழாவூம்இ 10 ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவூம்இ இரவ திருவூ+ஞ்சல்இ 11 ஆம் நாள் பூங்காவனத் திருவிழாவூம் தொடர்ந்து வைரவர் மடையூமாகஇ மண்டபப்பூசைகளுடன் ஆகம விதிகளிற்கமைய இலங்கைஇ இந்தியாவிலுள்ள அருள் ஆலயங்களில் நடைபெறுவது போன்று மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது.
ஆண்டு 2004 இல் எமபெருமானிற்கு அழகிய சித்திரத்தேர் அதி அற்புதமாக அமையப்பெற்றது. அடியார்கள் மெய்சிலிர்த்து மகிழ இந்நாடடில் வாழும் வெள்ளை இன மக்களும் பக்தி கொண்டு பரவசம் கொள்ள பஞ்சமுக விநாயகராக எம்பெருமான் சித்திரத்தேரேறி மங்கல வாத்தியங்கள்இ பக்திஇ பஜனைப் பாடல்கள்இ வேத மந்திரங்கள்இ காவடிகள்இ கற்பூரச்சட்டிகளோடு ஆனந்த சொரூபனாக அவனியில் தன்னாட்சி செழித்திட டென்கெல்டர் தெரு வீதியில் வலம் வந்த திருக்காட்சி நெஞ்சத்தில் பதிந்து நெகிழ்ந்து மனமுருகச் செய்தது. இறைவனின் பெருங்கருணையினால் தொடர்ந்து வந்த ஆண்டுகளிற்குள்ளே ஆலயத்திற்கு அடுத்ததாக கல்யாண மண்டபமும்இ அதனுடன் கூட சிவாச்சாரியார்களும் தங்குவதற்கு வேண்டிய இடங்களும் அமைக்க முடிந்தது. இடைவிடாது பக்தர்களின் வேண்டுதல்களாலும்இ பூசைகளாலும்இ இறைவன் ஆலயத்தில் இலட்சுமி கடாட்சம் பெருகி திருவருளும் பெருகிவரத் தலைப்பட்டது. ஆலயத்தில் பூர்வபக்கஇ அபரபக்க சதுர்த்திப் பூசைகள் முதற்கொண்டு நவராத்திரிஇ கேதாரகௌரிஇ கந்தஷஷ்டிஇ திருக்கார்திகை பிள்ளையார் பெருங்கதைஇ திருவெம்பாவைஇ போன்ற விரதம் நோற்பதற்குரிய பூசைகள் வரை அனைத்துமே சிறப்பான நடைபெற்று வருகின்றன. அத்தோடு தினமும் மூன்று காலப்பூசைகள் நடைபெறுவதோடுஇ வெள்ளிஇ செவ்வாய்இ ஞாயிறு தினங்களில் விஷேச சிறப்பு வழிபாடுகளும் நடந்தேறி இறைவன் அடியவர்களிற்கு அருள்பாலித்து வருகின்றார்.
எம்பெருமானின் பேரருளால் 2011 ஆம் ஆண்டு ஆவணி சங்கடகர சதுர்த்தியன்று இராஜகோபுரம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இதனை இந்நாட்டின் கட்டிடக்கலை நிர்மாணிப்பாளர்கள் ஆரம்பித்து இராஜகோபுரத்தின் அடுக்குத் தட்டுகளை மிகச்சிறப்பாகவூம்இ உறுதியாகவூம் அமைத்துத்தரஇ இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த சிற்பகலா நிலையம் இராஜகோபுரத்தை
முழுமையாக்கிஇ சிற்பங்களைக் கொண்டு அற்புதமாய் அழகு கொண்ட இராஜகோபுரமாக வடிவமைத்திருந்தார்கள். இதில் 17 கலைஞர்கள் இரவ பகல் பாராமல் கடும் குளிராலும்இ உறைந்து கிடந்த பனியிலும் நின்று பணியாற்றினார்கள். இந்த இராஜகோபுரம் அமைக்கின்ற திருப்பணியில் அனைவரையூம் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற பெரும் நோக்கில் அனைவரிடமும் சென்று திருப்பணி நிதி திரட்டியிருந்தார்கள். இதற்காக நிர்வாக சபைத் தொண்டர்கள் மட்டுமன்றி மெய்யடியார்களும் சிரமத்தைப் பாராது எம்பெருமான் ஆலயமும்இ இராஜகோபுரமும் சிறப்புடன் அமைய வேண்டுமென்ற எண்ணத்தை சிரமேற் கொண்டு பணியாற்றினார்கள். இராஜகோபுரப் பணிகளோடு ஆலயத்தின் உட்புறமும் மறுசீரமைத்து வர்ணங்கள் தீட்ட வேண்டி இருந்தமையாலும் 2013 ஆம் ஆண்டு தை 10 ஆம் நாள் புதன்கிழமை (23.01.2013) மிருகசீரிட நட்சத்திரமும்இ துவாச திதியூம் கூடிய சுபமுகூர்த்த வேளையில் எம்பெருமானின் ஆக்ஞையூடன் எம்பெருமானிற்கு பாலஸ்தானம் செய்;யப்பட்டது.
ஆலயத்தின் உட்புறச் சந்நிதானங்கள் முழுமையாக புதிதாக அமைக்கப்பட்டபோது இதன் ஒவ்வொரு சந்நிதானங்களும் அமைவதற்கான நிதியூதவியை ஒவ்வொரு இடங்களில் வாழும் மக்கள் அனைவருமாகவோ இல்லை சில குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்தோ சிறப்பாக உள்ளாலயம் அமையக் காரணமானார்கள். பாலாலயத்தில் பக்தி பொங்க குருமார்கள் நிகழ்த்திய பூசைகளின் பலனும் ஒன்று சேரஇ பார்த்த விழிகள் கண்மூடித்திறக்கு முன்னே நேர்த்தியாக ஆலயம் நிறைவேறிவரஇ நித்தமும் பெரும் அடியவர்கள் கூட்டம் உழவாரப் பணியை ஆற்றி முடிக்கஇ இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த கலாபூசனம் க. சுந்தரலிங்கம் குழுவின் வர்ணவேலைக் கலைஞர்கள் மிகச் சிறப்பான முறையில் வர்ணங்களைத் தொடுத்துஇ பார்த்தவர்கள் பார்த்து விழிமூட மறந்து வியத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாய் வர்ணம் தீட்டஇ எம்பெருமானின் இராஜகோபுரம் ஐரோப்பாவின் முதலாவது பஞ்சதல பஞ்சவர்ணத்துடன் கூடிய இராஜகோபுரம் என்ற பெருமையைப் பெற்றுஇ இந்த அழகு நிறை ஆலயம் நெதர்லாந்திற்கு மட்டுமல்ல ஐரோப்பாவிற்கே பெருமை சேர்க்கின்றது என்று பெருமை பாராட்டிஇ இந்நாட்டவர் தம் பத்திரிகைகளில் வியந்து பேசவைத்து ஐரோப்பாவின் அழகுப் பொக்கிஷம் என்ற கண்ணோட்டத்துடன் காண்பவர்களிடம் பெருமை பெற்றது.
எம்பெருமான் ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகப் பெருமானிற்கு நூதன இராஜகோபுர புனராவர்த்தன ஜீர்னோர்த்தாரண மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் செய்ய விஜய வருடம் ஆவணி மாதம் 31 ஆம் நாள் (16.09.2013) திங்கட்கிழமை துலா லக்கினமும்இ துவாத சித்திதியூம்இ திருவோண நட்சத்திரமும்இ அமிர்த யோகமும் கூடிய காலை 10.30 மணி முதல் 11.55 மணிவரையூள்ள சுபதினத்தில் நாட் குறித்து இறைவனின் அனுக்ஜை வேண்டி பூசைகள் நடாத்தி கும்பாபிஷேகப் பணிகளை எமது ஆலயக்; குருக்கள் பிரதம குருவாக பொறுப்பேற்கஇ இலண்டன்இ இந்தியா உட்பட ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வருகை தந்த அனுபவம் நிறைந்த பத்தொன்பது சிவாச்சாரியப் பெருமக்களும் கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய திரவியஙூங்கள் சேர்ப்பது முதற் கொண்டு அனைத்து வேலைகளையூம் ஆரம்பித்ததிருந்தார்கள். ஐந்து
நாட்கிரியைகளின் அனைத்துக் கிரியைகளும் சிறப்பாகவூம்இ பக்தியோடும் நடைபெற்று வரஇ கும்பாபிஷேக தினத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த நாட்டிற்கேயூரிய கடுங்குளிரும்இ பெருங்காற்றும்இ பெருமழையூம் தலைவிரித்தாடத் தொடங்கியது. காலநிலையின் கண்மூர்க்கத்தனமான நிலைகண்டு அனைவரும் கதிகலங்கிப் போனார்கள். பஞ்சகுண்ட யாக மண்டபத்தை கண் மூடாது காத்திருந்தார்கள். அதற்குள்ளும் மெய்யடியார்கள் மனம் தளரவில்லை. எங்கள் விநாயகப் பெருமான் மிகவூம் சக்தி படைத்தவர். விக்கினங்களைக் கொடுத்து விளையாடுவது அவர் திருவிளையாடல். ஏனென்றால் அவர் முதன் முதலாக இலண்டனில் இருந்து திருவூருவச் சிலையாக இங்கு எழுந்தருளிய போதும் இவ்வாறுதான் வாகன நெரிசலுக்குள் தம்மை சிக்க வைத்து காலதாமதமாக்கி திருவூருவச் சிலையை எடுத்து வந்த மெய்யடியார்கள் கலங்கி நின்றபோதுஇ இன்னேர் இடத்தில் புறப்படவிருந்த வள்ளத்தையூம் காலதாமதமாகப் புறப்பட வைத்து தன்னருள் விளையாட்டின் அற்புதத்தை நிகழ்த்தியவர். அதன் பின்னரும் அவ்வாறு பலஅற்புதங்களை நிகழ்த்தியவர்.
எனவே எம்பெருமானிற்குத் தெரியூம் எல்லாவற்றையூம் நிகழ்த்த என்று மெய்யடியார்கள் மெய்சிலிர்த்து அவரின் அருளைப் பேசஇ என்ன அதிசயமோ கும்பாபிஷேக தினமன்று கடுங்குளிர் குறைந்துஇ வீசிய பெருங்காற்றையூம் புறமுதுகிட்டோட வைத்துஇ வானவீதியை நீல வண்ணத்தால் கோலம் போட்டுஇ அற்புதக் காட்சியாக்கிஇ அந்தணப் பெருமக்கள் சிவாகம முறைப்படி வேத மந்திரங்களை ஓத மங்கல வாத்தியங்கள் ஒலிக்கஇ பக்தர்கள் பரவசத்தில் உச்சிமேல் கைதூக்கி ஓங்கார நாதனைத் துதிக்க சக்தி சிவன் பாலனின் நூதன இராஜகோபுரம் வானவீதியில் தேவர்கள் சூழ்ந்திருக்க குடமுழுக்காடியது. தேவலோகத்திலிருந்து பூவூலகிற்கு தேவாமிர்தம் சிந்துதல் போல் குடமுழுக்காடிய நீர் பூமிக்கு வந்த தோற்றம்; மெய்சிலிர்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து எம்பெருமான் மூலாலயத்தில் குடமுழுக்காட்டு வைபவமும் பக்தி பெருக நிறைவேறியது. கருணைக் கடலான கணபதி வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயத்தில் வீற்றிருந்து எமக்கு அருள் பாலிக்கின்றார். பூர்வ n;ஜன்மத்தில் நாம் செய்த புண்ணியத்தால் பாவங்களை அறுத்தெறியூம் பரமன் திருக்குமாரனின் குடமுழுக்கை நாம் எம் வாழ்வில் கண்டுகொண்டோம். மங்கல வாத்தியங்கள்இ சங்குகள் ஒலிக்க பூதகணங்கள் புடைசூழ பக்தர்கள் வெள்ளம் திரண்டிருக்க பார்வதி மைந்தன் ஆலயத்தில் குடி புகுந்து அருளாட்சி செலுத்துகின்றார். நாமெல்லாம் அவரின் பாதார விந்தங்களை வணங்கிப் பேரானந்தப் பெருவாழ்வூ பெறுவதற்காய் இவ்வாலயத்தில் நித்திய நைமித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன நித்திய பூஜைகளாக நிதமும் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடைபெறுகின்றன வெள்ளிக்கிழமைகளிலும் விஷேட தினங்களிலும் கூட்டுப்பிராh;தனைகளும்இ விஷேட சமய சொற் பொழிவூகளும் சிவாச்சாhpயா;களினால் நடாத்தப்பட்டு வருகின்றது. மாதந்தோறும் பூh;வபக்க அபரபக்க சதுh;தி தினங்களில் எம்பெருமான் விநாயகப் பெருமானுக்கு மிகசிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதோடு சுவாமி வீதிவலம் வருதலும் நடைபெறுகின்றது. பிரதோஷ தினங்களில் சுந்தரேசப் பெருமானுக்கு மிக சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது. நவராத்திhp தினங்களில் 10 நாட்களும்இ கோதாரகௌhp விரதகாலத்தில் 21 நாட்களும்
கந்தசஸ்டி விரதகாலத்தில் 6 நாட்களும் பிள்ளையாh; பெரும்கதை காலத்தில் 21 நாட்களும்இ திருவம்பாவை கால்த்தில் 10 நாட்களும்இ சிவராத்திhp தினங்களில் நான்கு ஜாமமும் பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரா பௌh;ணமிஇ ஆடியமாவாசை தினங்களில் நடைபெறும் பூஜைகளின் பின்னா; முன்னோh;களின் ஆத்ம சாந்தி வழிபாட்டு கிhpகைகள் அடியயா;களுக்கு சிவசாhpயா;களினால் நடாத்திவைக்கப்படுகின்றது. தைபூசம்இ மாசிமகம்இ வைகாசிவிஷாகம் காh;த்தி கையில் காh;த்திகை மாh;கழியில் திருவாதிரை போன்ற விஷேட நட்சத்திர தினங்களிலும் பூஜைகள் நடைபெறுவதுடன் பங்குனி உத்தரம்இ ஆனி உத்தரம்இ ஆவணி சதுh;த்p போன்ற தினங்களில் விஷேட சங்காபிஷே வழிபாடும் நடைபெறுகின்றது. அத்துடன் இவ்வாலயத்திற்கு மகுடம வைத்தாற்போல் இவ்வாலயத்தில் நடைபெறும் 10 நாட்கள் மகோற்சவ வழிபாடு மிகசிறப்பாக நடைறெ;று வருகின்றது. கணபதி நாதன் இவ்வாலயத்தில் அமா;ந்திருந்து அற்புதமாய் அருளாட்சி செய்கின்றான். மறுமையிலும் அவன் அருள் பெறும் பாக்கியத்தை பெறவூள்ளோம்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
அனைவரும் வருக அருளினைப் பெறுக
சரணம் சரணம் விநாயகா
சரணம் சரணம் விநாயகா
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.